search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெய் நிஷிகோரி"

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கெய் நிஷிகோரி ஆட்டத்தின் இடையே காயத்தால் வெளியேறியதால் ஜோகோவிச் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறினார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் - 8-ம் நிலை வீரரான கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்தினார்கள்.

    முதல் செட்டை எந்தவித சிரமமின்றி ஜோகோவிச் 6-1 எனக்கைப்பற்றினார். 2-வது செட்டில் ஜோகோவிச் 4-1 என முன்னிலையில் இருக்கும்போது நிஷிகோரி காயத்தால் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மிலோஸ் ரயோனிக் - லூகாஸ் பவுலி மோதினார்கள். இதில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை லூகாஸ் பவுலி 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.

    ஆனால் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 3-வது செட்டை ரயோனிக் கைப்பற்றினார். 4-வது செட்டை பவுலி 6-4 எனக்கைப்பற்றி வெற்றி பெற்றார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிலிப் கோல்ஸ்கரைபரை வீழ்த்திய கெய் நிஷிகோரி காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில், ஜப்பானை சேர்ந்த கெய் நிஷிகோரியும், ஜெர்மனியை சேர்ந்த பிலிப் கோல்ஸ்கிரைபரும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நிஷிகோரி அபாரமாக ஆடினார். இதனால் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார்.

    இரண்டாவது செட்டை கைப்பற்ற வேண்டும் என இருவரும் தீவிரமாக ஆடினர். ஆனால், நிஷிகோரி திறமையாக விளையாடி 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்றார்.

    மூன்றாவது சுற்றில் கோல்ஸ்க்ரைபர் சற்று நெருக்கடி தந்தாலும், சுதாரித்துக் கொண்ட நிஷிகோரி மூன்றாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
     
    இறுதியில், நிஷிகோரி 6-3 6-2 7-5 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் நிஷிகோரி மரின் சிலிச் அல்லது டேவிட் கோல்பினுடன் மோதுகிறார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
    ×